நடமாடும் நகைக்கடையுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் புகழ்… வேற லெவல் காம்போ!

நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் ஹரி நாடார் கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் வனிதா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் திருமணத்திற்குப் பின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் அவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்து பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளரானர். அதனைத் தொடர்ந்து அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பின்னர் மூன்று மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பல சர்ச்சைகளை சந்தித்தார்.

இந்த நிலையில் வனிதா, ‘2K அழகானது காதல்’ என்ற திரைப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக, ஹீரோவாக நடமாடும் நகைக்கடையாக வலம்வரும் ஹரிநாடார் நடிக்க உள்ளார். இவர் பனங்காட்டு படை எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதற்கு கோட் சூட்டில், கழுத்தில் கிலோக்கணக்கில் தங்கத்துடன் ஹரி நாடார் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…