டானுடன் இணைந்த சமுத்திர கனி!

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மார்ச் மாதம் 26-ம் தேதி ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்து நடிக்கிறது.

மேலும் ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார். அதேபோல் சூரியுடன் நகைச்சுவை கூட்டணி உருவாகியுள்ளது.

முதல்முறையாக இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். இவர்களுடன்,  குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, ஆர்ஜே விஜய், பிக்பாஸ் ஷாரிக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.


டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 11-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் இன்று நடிகர் சமுத்திரக்கனி படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…