பிக்பாஸில் கமல் வருவது மக்களின் கைகளில் தான் உள்ளது
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, மற்ற 3 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். வார நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை பார்க்க ஏற்படும் அதே ஆர்வம், கமல் வரும் வார இறுதி நாட்களிலும் ஏற்பட்டது. இதனால் தனது அரசியல் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிக்பாஸ் மேடையை கமல் பயன்படுத்திக் கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களும் ஜூன் மாதத்தில் துவங்கி, செப்டம்பர் மாதத்தில் இறுதி போட்டி நடத்தப்பட்டது. ஆனால் நான்காவது சீசன் கொரோனாவால் தாமதமாக, அக்டோபர் 4 ம் தேதி துவங்கப்பட்டது. ஜனவரி 17 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.
இப்போது தான் 4 வது சீசன் முடிந்துள்ளதால் அடுத்த சீசனும் தாமதமாக துவங்குமா அல்லது முதல் சீசன்களை போல் துவங்கப்படுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. ஆனால் மக்கள் மகிழ்ச்சி தரும் விதமாக ஜூன் 25 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்பட உள்ளது.
முதல்கட்ட பணிகளை விஜய் டிவி துவங்கி விட்டது. போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. இருந்தாலும் கமல் பங்கேற்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை . ஏனெனில், இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்து ஆட்சி அமைத்தாலோ அல்லது ஆட்சி அமைக்கும் கூட்டணி பங்கேற்றாலோ பிக்பாஸ் 5 ல் கமல் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதில் வேறொரு முன்னணி பிரபலம் தான் தொகுத்து வழங்குவார்.இதனால் தேர்தல் முடிவுகளை பொறுத்தே கமல் தொகுத்து வழங்குவது முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.