‘தளபதி 66’ அப்டேட்!

லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த மாஸ்டர் படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து ’தளபதி 65’ படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அட்லி, லோகேஷ் கனகராஜ் என்ற இரண்டு இயக்குநர்களுடனும் விஜய் கூட்டணி வெற்றிகரமாகத் தான் இருந்துள்ளது. இதனையடுத்து, ’தளபதி 66’ படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்குத் தான் கொடுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அட்லிக்குத் தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *