கே.ஜி.எப் மறந்து விடும்; அவ்வளவு மாஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65-ல் நடிக்கப் போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த படம் பற்றி தினமும் ஏதாவது தகவல் வந்த வண்ணம் உள்ளது. இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. சமீபத்தில், சன் ஸ்டூடியோசில் விஜய்யின் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது.


இயக்குநர், திலீப்குமாரும் இதை உறுதிப்படுத்தி உள்ளார். அவர் , ”தளபதி 65 அதிக வலுவான படமாக இருக்கும். தளபதி 65 படத்தின் சண்டை காட்சிகளை பார்த்த பிறகு ரசிகர்கள் கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்து விடுவார்கள்”என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.


Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…