வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்கும் மீரா மிதுன்!

பத்தாண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும், வடிவேலு இல்லாத மீம்ஸ்களே இல்லை எனலாம். ஒரு காலத்தில் ஹீரோக்களைப் போலவே காமெடியில் வடிவேலுக்கும் படத்தில் ஒரு தனி இடம் இருக்கும்.  

அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய, ‘வைகைப்புயல்’ வடிவேலு, ”நான் பத்தாண்டுகளாக லாக்டவுனில் தான் உள்ளேன். நடிப்பதற்கு ஆவலும் உடலில் தெம்பும் உள்ளது. ஆனால் வாய்ப்பு கொடுக்க யாரும் முன்வரவில்லை” என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

தற்போது, அவர் சூர்யா நடிக்கும் படம் மற்றும் திருமுருகன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நிச்சயம் இது ரீஎண்ட்ரியாக இருக்கும்.

இந்நிலையில், சர்ச்சை நடிகை மீரா மிதுன் வடிவேலு பற்றி பேசியுள்ளார். அதில், “நான் விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளேன். விருப்பம் இருந்தால் அவர் அதில் நடிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும். அவர் “எப்பொழுதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகம் செய்தும் துரோகத்தினாலும் தான் வீழ்த்துவார்கள். ஆனால் யாரும் யாரையுமே ஒதுக்க முடியாது.

இது என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம்.உங்களின் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் ரசிகை. இங்கு நிறைய பேர் நடிப்புக்கு இலக்கனமே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் ஒரு சகாப்தம். கண் கலங்கக் கூடாது ” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…