மாதவனுக்கு டாக்டர் பட்டம்

தமிழில், அலை பாயுதே, மின்னலே படங்களின் மூலம் இளம்  ரசிகர்களை குறிப்பாக இளம் பெண்களைத் தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
நடிகராக மட்டுமல்லாது, ’ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படம்,  இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றைஅடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்கிறார். அவருடன் நடிகை சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

திரைத்துறையில் பிஸியாக இருக்கும் நடிகர் மாதவனுக்கு அவரது கலைச்சேவையை பாராட்டி கோலாபூரில் உள்ள,  டி.ஒய் பாட்டில் பல்கழைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து நடிகர் மாதவன் கூறுகையில், “இந்த மரியாதையால் நான் உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன். சவால் அளிக்கக் கூடிய புதிய படங்களைத் தொடர இது என்னை ஊக்கப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *