’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்!

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது.

ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதன் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளார் இயக்குநர் கண்ணன். நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த முன்னணி நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று தெரியவந்துள்ளது. அவரும் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷே நடிப்பார் எனத் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…