ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’; ரசிகர்கள் ஏமாற்றம்

தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் ரிலீசாகும் என தகவல் வந்தது. இதற்கு ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   

இதற்கிடையே  ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களைப் போல தானும் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருப்பதாக கடந்த 2-ம் தேதி தனுஷ்  ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்தப்படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வெளியாகிறது என்பது குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…