அடுத்த சித்தி வரலட்சிமியா?

1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு அந்த தொடரின் இரண்டாவது பாகம் ‘சித்தி 2’ என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதிலும், ராதிகா தான் சித்தியாக நடித்து வந்தார்.

ஆனால், தன் கணவர் சரத்குமாருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதால் ‘சித்தி 2’ தொடரில் இருந்து விலகுவதாக ராதிகா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, யார் அடுத்த சித்தி என்ற ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது.
அடுத்த சித்தியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பலர் தெரிவித்தாலும், இவருடன் சேர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் பெயரும் அடிபட்டது. ஆனால்வரலட்சுமி, ”நான் சித்தியாக நடிக்கவில்லை; அந்தத் தகவல் பொய்யானது” என்று தெரிவித்துள்ளார்