நடிகைக்கு பாலியல் வன்கொடுமை.. வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி நிர்வாகி!

சென்னையில் திரைப்பட நடிகையின் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்த சமீரா (22) எதிரொலி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் புழல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில் செங்குன்றம் அடுத்த கோடுவெளி பகுதியில் பொறியியல் கல்லூரி நடத்தி வரும் கோவிந்தராஜ் (55) என்பவர் தான் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கச் சொல்லி அணுகியதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஒப்புக் கொண்ட நிலையில் கதை விவாதத்திற்கு சென்ற போது கோவிந்தராஜ் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை சமீரா கூறியுள்ளார்.

மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு இணையதளத்தில் வெளிவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், அதனைத் தொடர்ந்து கோவிந்தராஜின் அடியாளான ஜெயக்குமார் புகாரை வாபஸ் பெறச் சொல்லி தன்னை மிரட்டுவதாக நடிகை சமீரா கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் நான் வீட்டில் இருந்த போது கோவிந்தராஜின் அடியாட்களான ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் 4 ஆண்கள், 4 பெண்கள் வந்து தன்னையும், தன் தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியாக கூறியுள்ளார்.

கழுத்தை பிடித்து நெரித்த ஜெயக்குமார், கோவிந்தராஜ் சொல்வதை மறுக்காமல் கேட்க வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார் என குற்றம் சாட்டியுள்ளார்.

உடன் இருந்த அடியாட்கள் ஆபாசமாக பேசி, எங்களை சராமரியாக அடித்து உதைத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இதனயைடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *