அரசியலில் போஸ் வெங்கட்!

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரபல நடிகர், நடிகைகள் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம்.

சமீபத்தில், திமுக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுவை அளித்தது. போட்டியிட விருப்பும் பலரும் விருப்பமனுவைப் பெற்றுச் சென்றனர். மெட்டி ஒலி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான போஸ் வெங்கட், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை பெற்றுள்ளார்.

போஸ் வெங்கட்டின் மனுவை பரீசிலனை செய்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், அவர் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.