அஜித்தின் பழைய படத்தின் புதிய அப்டேட்!

அஜித், நயன்தாரா, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் ‘பில்லா’. விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இப்படம் 1980ஆம் ரஜினி நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தின் ரீமேக் ஆகும். பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு ‘பில்லா’ திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி அன்று மீண்டும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்தகவலை அஜித்  ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 2010ஆம் ஆண்டு இப்படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், தற்போது இப்படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தனர்.

இந்நிலையில், அஜித்தின் ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…