ரஜினிக்கு எமோசனல்… விஜய்க்கு ரொமன்ஸ்… கதையுடன் காத்திருக்கும் பிரபல இயக்குநர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோருக்கான கதைகள் தன்னிடம் இருப்பதாக இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இதனை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சிறப்பாகக் கொண்டாடினர்.

தமிழின் முன்னணி இணைய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், துருவ நட்சத்திரம் படத்தின் கதை ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்காக திட்டமிடப்பட்டதாகவும், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றும் கூறினார். இந்த நேரத்தில், ரஜினிகாந்த் எமோஷனல் கதைகளில் நடிக்க முடியும் என்பதால், வாய்ப்பு கிடைக்கும்போது அப்படியான ஒரு கதையை அவரிடம் விவரிப்பேன் என்றும் கெளதம் குறிப்பிட்டார்.

அதோடு தளபதி விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரியை இயக்க வேண்டும் என நீண்டகால ஆசை இருப்பதாகவும், முழுமையான ஸ்கிரிப்டுடன் அவரை அணுகினால் அது நிச்சயம் பலனளிக்கும் என்று தான் நம்புவதாகவும் அந்த நேர்க்காணலில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *