கூகுள் மேப்பால் வழி தவறிய அஜித்
நடிகர் அஜித் நடிப்பதில் மட்டுமல்லாமல் பல துறைகளில் ஆர்வமுடையவர். அந்த வகையில், துப்பாக்கி சுடுவதில் அஜித் அதிக விருப்பமுடையவர். சென்னை எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளார். அங்கு தான் சென்னை காவல் ஆணையரின் பழைய அலுவகம் இயங்கி வந்தது.
இந்நிலையில், அங்கு செல்வதற்காக வாடகைக் காரில் கூகுள் மேப்பில் பதிவிட்டு வந்துள்ளார். ஆனால், மேப் பழைய காவல் ஆணையரின் அலுவகத்துக்குச் செல்லாமல், வேப்பேரியில் உள்ள புதிய காவல் ஆணையரின் அலுவலகத்துக்குச் சென்று விட்டது.
பிறகு, அங்கிருந்து எழுப்பூரில் உள்ள ரைபிள் கிளப்பிற்குச் சென்று விட்டார். திடீரென அஜித்தைக் கண்ட மக்கள், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.