ஓடிடியில் டெடி

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்திற்குப் பிறகு, ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது . இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கொரோனா பொது முடக்கத்தால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதற்குள், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளம், பெரும் விலை கொடுத்து ‘டெடி’ படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதன்படி, மார்ச் 19-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ‘டெடி’ படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.