சுஷாந்தைத் தொடர்ந்து அவரின் நண்பரும் தற்கொலை

சுஷாந்த் சிங் ராஜ்பூட், இந்தப் பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின.

திரையுலகினரும், ரசிகர்களும் சுஷாந்தின் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில், அதே படத்தில், சுஷாந்தின் நண்பராக நடித்த சந்தீப் நஹார் என்பவரும், மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன்பாக தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்னைகள், திருமணத்தில் இருந்த சிக்கல் குறித்து பேசியுள்ளதாகவும். தன் மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.