தமிழின் தாய்மடி கீழடி – ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர். ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியதன் மூலம் தமிழக மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார்.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் ’ஃப்ரெண்ட்ஷிப்’ என்ற   படத்தின் மூலம், ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக, பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, காமெடி கதாபாத்திரத்தில் சத்தீஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், வில்லானாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, ஹர்பஜன் சிங், “தமிழனின் தாய்மடி கீழடி. தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி!
எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த கோடைக்கு நம்ம படம் ஃப்ரெண்ட்ஷிப் வருது. தளபதி, தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *