சினிமாவில் டிக்டாக் பிரபலம்: யார் அவர்?

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து. டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.  பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.நாள்தோறும் இவர் வெளியிடும் வீடியோக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுக்க காரணம் தென் மாவட்டத்திற்கே உரித்தான எதார்த்தமான தமிழ் பேச்சுதான். “ஏலே செத்தப்பயலே, நாரப்பயலே” என்று இவர் திட்டுவதைக் கூட ரசிக்க தனி கூட்டம் இருக்கும்.

தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர்.

டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொரோனா காரணமாக தொழில் பாதிப்பு, தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் உள்ளிட்ட காரணத்தால் திடீரென தற்கொலைக்கு முயன்ற ஜி.பி.முத்து சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நாளை புதுபடம் படப்பிடிப்பு என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கும் ஜி.பி. முத்து, வெள்ளை வேட்டி சட்டையில் பட்டு துண்டு அணிந்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். ஆனால், அவர் எந்தப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *