வசந்த பாலன் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ்

வசந்த பாலன், தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனையடுத்து, தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

தன் சொந்த ஊரான காமராஜர் பிறந்த விருதுநகரில், உடன் படித்த பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ’அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோ’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

தன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில், நாயகனாக அர்ஜூன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் பட்ப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.