ஐஸ்வர்யா ராஜேஷ் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒப்பந்தம்

விஷ்ணு விஷால் நடிப்பில், ’காடன்’ மற்றும் ‘ஜகஜால கில்லாடி’ போன்ற படங்கள் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

அதுமட்டுமின்றி, விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக எஃப்.ஐ.ஆர் படத்தில் மனுஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதால் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் விஷ்ணு விஷால்.

மேலும், அந்த படத்தையும் தானே தயாரித்து நடிக்கவுள்ளார். மோகன் தாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ’களவு’ படத்தி இயக்கிய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.