அன்பு நண்பர் விஜயகாந்த் இழப்பு மிகபெரிய துரதிஷ்டம் ரஜினிகாந்த் இரங்கல்
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு- அன்பு நண்பர் விஜயகாந்த் இழப்பு மிகபெரிய துரதிஷ்டம் மனது ரொம்ப கஷ்டமா இருக்கிறது. விஜயகாந்த் அசாத்தியமான மனிதர் மன உறுதி கொண்டவர்.
எப்படியாவது சரியாகி வந்திருவார்என்று நினைத்தேன் ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அவரை பார்க்கும்போதே அவர் முடியாமல் இருந்ததே பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் பெரிய சக்தியாக இருந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்திருப்பார் அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்துள்ளனர் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.