விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி படத்தை பார்த்து ஒப்பாரி வைத்து அழுத மூதாட்டி வீடியோ வைரல்
கரூரில், விஜயகாந்த் மறைவையொட்டி வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி படத்தை பார்த்து ஒப்பாரி வைத்து அழுத மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தநிலையில், தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் பெரியார் காலனி பகுதியில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் அஞ்சலிக்காக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் பாப்பம்மாள் என்ற மூதாட்டி அவரது படத்தை தொட்டு ஒப்பாரி வைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.