அதிமுக.வை வீட்டிற்கு அனுப்பியதை போல் பாஜக.வையும் அனுப்பனும்; உதயநிதி வேண்டுகோள்

ஈரோடு மாவட்ட திமுக சார்பில் மூத்த முன்னோடிகள் 2580 பேருக்கு   திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி மற்றும் நிதியுதவி வழங்கினார்.

பெருந்துறை அடுத்த சரளை.யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, தந்தை பெரியாரின் பாசறையில் பெருமையான உணர்வோடு இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளேன். திமுக அரசின் சாதனைகளுக்கு பலனாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். 

இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாததை திமுக செய்து வருகிறது. மூத்த முன்னோடிகளை கௌரவித்து வருகிறோம். டிசம்பர் 17 இளைஞரணி மாநாடு சேலத்தில் நடக்கிறது. மதுரையில் 3 மாதம் முன் ஒரு கட்சியின் மாநாடு நடந்தது. எப்படி நடக்க கூடாது என்பதற்கு அது உதாரணம். நம் இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக இருக்கும். 

தேர்தல் வாக்குறுதி ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். அதில் குறிப்பாக மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமை பெண் திட்டம், இந்தியாவே உற்று நோக்கும் பள்ளிகளில்  காலை உணவு திட்டம், மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆகியவை முத்தான திட்டங்களாக உள்ளன. இது குறித்து மக்களிடம் கட்சியினர் எடுத்து சொல்ல வேண்டும் 

2021 சட்டமன்ற தேர்தலில் அடிமை ஆட்சி அதிமுக.வை வீட்டிற்கு அனுப்பியதை போல், 2024 பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் ஓனர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய பாசிச பாஜக.விடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். அதற்கேற்ப கட்சியினர் உழைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *