ஆளுநருக்கு மூளை சரியில்லை; ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடல்
அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநருக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவருக்கு மூளை சரியில்லை, அவர் இஷ்டத்திற்கு செயல்படுகிறார். சிலருக்கு பூணூல் அணிவிக்கிறார், நாளை அரை ஞான் கயிறு கட்டி விடுவார், இன்னும் கொஞ்ச நாள் போனால் தாலி கூட கட்டுவார். EVKS இளங்கோவன் செய்தியாளர்களை சந்திப்பில் பேசினார்
அதுபோன்று மூளை சரியில்லாத ஒரு ஆளாக அவர் இருக்கிறார் குற்றாலத்தில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற வேண்டும். நான்கு நாட்களில் எவ்வளவு மாற்றங்கள். முதலில் மனிதனாக அவர் மாற வேண்டும். மெண்டல் ட்ரீட்மென்ட் அவருக்கு தேவை.
தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நடத்தப்படும் கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. யாருக்கும் அழைப்பு இல்லாமல் மர்மமான கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது என்று தெரியாது, முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள் மூத்த தலைவர்கள் என்று சொன்னார்கள் இப்போது முடிந்து போன தலைவர்கள் எனச் சொல்கிறார்கள்..
செந்தில் பாலாஜி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல உடல்நல கோளாறுகள் அவருக்கு இருக்கின்றன .தகுந்த சிகிச்சை முதலில் தர வேண்டும். ஐந்து மாநில தேர்தலில் பஞ்சபாண்டவர்கள் போல் நாங்கள் வெற்றி பெறுவோம்..
காவிரி பிரச்சனை பொறுத்தவரை கர்நாடகாவிலும் அதே பிரச்சனை இருக்கிறது சுமூகமாக இரண்டு மாநிலங்களும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் ஆணையத்திற்கும் சென்று இருக்கிறார்கள் அங்கு தீர்வு இல்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடி தீர்வு பெற வேண்டும்