திருப்பதி கோவிலுக்கு 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் கிலோ தங்கம், 5 ஆயிரம் கோடி வந்துள்ளது 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நான்கரை ஆண்டுகளில் 3885.92 கிலோ தங்கம் , ₹ 4791.06  கோடி பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது செயல் அதிகாரி தர்மாரெட்டி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரியாக உள்ள தர்மா ரெட்டி அந்தப் பதிவில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் மீது டெல்லியில் 14 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் அவர் ஆட்சி நிர்வாகத்தில் தேவஸ்தானத்தில் ஊழல் நடந்திருப்பதாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஆணம் வெங்கட்ரமணா என்பவர் விஜயவாடாவில் குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில் தேவஸ்தானத்தில் இணை செயல் அதிகாரியாகவும், செயல் அதிகாரியாகவும் இருப்பதற்கு தேவஸ்தான நிர்வாக சட்டப்பிரிவு 107 பிரிவில் ஆந்திர பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக  அல்லது அதற்கு இணையான பதவி வகித்து இருக்க வேண்டும் என்று உள்ளது. 

எந்த இடத்திலும் ஐ.ஏ.எஸ். என்று இல்லை. நான் 1991 ஆண்டு  ஐ.டி.இ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசில் இணை செயலாளராக பதவி வகுத்துள்ளேன். இந்த பதவி மாநிலத்தில் கூடுதல் முதன்மை செயலாளருக்கு இணையான பதவி ஆகும். இதுகுறித்து ஏற்கனவே திருப்பதியை சேர்ந்த நவீன் குமார் ரெட்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நான் செயல் அதிகாரியாக பதவி வகிப்பதற்கு உரிய தகுதி இருப்பதாகவும் எந்தவித தடையும் இல்லை உத்தரவிட்டனர். 

மேலும் என் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக  குற்றம் சாட்டியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு டெல்லியில் கட்டிட பிரிவில் சி இ ஓ வாக  முனிசிபல் அதிகாரியாக இருந்தேன். அப்பொழுது பல கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவை இடிக்கப்பட்டது அதில் பல கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 

அதில் ஒருவர் 2014 ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்ட கட்டிடத்திற்கு எந்தவித நோட்டீசுஸ் வழங்காமல் சீல் வைத்ததாக எனக்கும் அப்பொழுது பணியில் இருந்த பொறியாளர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் எனக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்மனை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் ஆந்திர உயர்நீதிமன்றமும் தடை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. 

சட்டத்திற்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றி சீல் வைக்கப்பட்டதற்கு அப்பொழுது நான் அந்த பதவியில் இருந்த பொழுது நடந்தது. அதன் பிறகு யார் அந்த பதவிக்கு வருகிறார்களோ அவர்களே அதற்கு பொறுப்பாவார்கள். எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நான் கூடுதல் செயல் அதிகாரியாக நியமனம் ஆகி, அதன் பிறகு செயல் அதிகாரியாக தற்போது பதவி வகித்து வரக்கூடிய நிலையில்  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்   2019 ஆண்டு வரை ₹ 13025.08  கோடி  வங்கியில்  டெபாசிட் செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் கூடுதலாக ₹ 4791.06 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தற்போது தேவஸ்தானத்தின் வங்கி கணக்கில் ₹ 17816.15 கோடி டெபசிட் தொகை உள்ளது. இதேபோல்   2019 ஆம் ஆண்டு வரை 7,339. 74 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இந்த நான்கரை ஆண்டுகளில் 3885.92 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியில் தற்போது 11,225.66  கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கியதன் மூலம் ₹ 1021  கோடி பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர். இந்த நிதியில் 176 புதியதாக கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. 205 கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அருங்காட்சியகம் ₹  140 கோடியில் நன்கொடையாளர் நிதியின் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அலிபிரி நடைப்பாதையில் மேற்கூரை ₹ 25 கோடியில் நன்கொடை மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ₹ 25 கோடியில் பரக்காமணி உண்டியல் காணிக்கை எண்ணும்  கட்டிடம் நன்கொடை மூலம் கட்டப்பட்டது.

பர்டு மருத்துவமனையில் ₹ 15 கோடியில் மருத்துவ கருவிகள்,  உதய அஸ்தமன சேவைக்கு ₹ 1 கோடி நன்கொடை வழங்கினால் 20 ஆண்டுக்கு  அனுமதிக்கப்படும் என்று கூறிய பிறகு ₹ 175 கோடி பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர். இந்த நிதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 

பத்மாவதி குழந்தைகள் இருதாலயா மருத்துவமனை தொடங்கப்பட்டு இதுவரை 2000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையும், 8 இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. என பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் என் மீது ஊழல் நடந்ததாகவும், கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இது குறித்து எந்த இடத்திலும் பொது விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன் குற்றம் சாட்டுபவர்கள் உரிய ஆதாரங்களுடன் ஆவணங்களுடன் விவாதம் நடத்த வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் சவால் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *