யாருமே கூட்டணிக்கு அழைக்கவில்லை; தேமுதிக பொருளாளர் பிரேமலதா கவலை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை அதிமுக பாஜக ஆகிய இரு தரப்பிலிருந்தும் தங்கள் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் தேமுதிக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், 

சென்னையில் மழை நீர் வடிகாலின் பெயரில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் தோன்றுவதில் காட்டப்பட்ட ஆர்வம் அதை நிறைவேற்றுவதில் காட்டவில்லை என்பதால் இருசக்கரம் மூன்று சக்கர நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மிகவும் சிரமப்படும் நிலைமை உள்ளது என கூறிய அவர் சிங்கப்பூருக்கு இணையான சிங்கார சென்னை என கூறிய ஆட்சியாளர்கள் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் சிங்கார சென்னை ஆக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.  உடனடியாக மழை நீர் வடிகாலை சரி செய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்றார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் பிரிந்த நிலையில் தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை எனவும் பாஜக அதிமுக என இரு தரப்பிலிருந்தும் இதுவரை கூட்டணி தொடர்பாக பேசவில்லை எனவும் நட்பு ரீதியாக பேசியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்

இந்தியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல் வரை உறுதியான கூட்டணியாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் இந்த கூட்டணியில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் நான்தான் பிரதமர் வேட்பாளர் என கூறி வருகின்றனர் அந்த கூட்டணிக்குள் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதால் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றார்

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் கண்துடைப்பு எனவும் எந்த கட்சியும் நீட்டிற்கு  எதிராக எதுவும் பேசாத நிலையில்  உதயநிதி மட்டும் மாணவர்களை தெளிவான முடிவு எடுக்க விடாமல் செய்கிறார் எனக் கூறிய அவர் நீட் தேர்வை ஒழிப்பது கடினம் என்றார் நீட் தேர்வின் பெயரில் வசதி படைத்த மாணவர்கள் பல லட்சம் செலவு செய்து கோச்சிங் சென்டர்களில் பயின்று தேர்வு எழுதும் போது ஏழை மாணவர்கள் அவர்களோடு போட்டியிடுவது கடினமாக உள்ளது என்பதை ஒத்துக் கொண்ட அவர், சரியான கல்வியை பள்ளி கல்லூரிகளில் வழங்கினால் தனியாக கோச்சிங் சென்டர் தேவையில்லை என்றார்

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மாநாடுகள் நடத்துவது வழக்கம் அதையொட்டி தற்போதும் சேலத்தில் மாநாடு நடத்துகிறார்கள் அது புதிதல்ல என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *