8 மாத கர்ப்பிணி பெண் சந்தேகம் மரணம்; மருத்துவமனையில் பரபரப்பு

மருத்துவத் துறையினர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கானவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது

இந்நிலையில் சடலத்தில் ஈம கிரியைக்கு கணவர் வராததால் பரபரப்பு காணப்பட்டது போடி அருகே டொம்புச்சேரி கிராமத்தில்   பட்டாளம்மன் கோவில் தெருவில் வாசித்து வரும் வீரக்குமார் இவரது மனைவி சரண்யா 25 வயது திருமணம் ஆகி நான்கு வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு பத்ரு என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளன

அடுத்ததாக 8 மாத கர்ப்பிணியான சரண்யா தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி நிலையில் இரவு  உறங்க சென்ற நிலையில்

அதிகாலையில் படுத்த படுக்கையில் சடலமாக இருப்பதைக் கண்ட கணவர் வீரக்குமார்அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்திற்குதகவல் கூறிபார்த்தபோது சரண்யா இறந்தது தெரிய வந்தன உடனடியாக

டொம்புச்சேரி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்தகவல் அறிந்த டொம்புச்சேரி அரசு மருத்துவமனைசெவிலியர்கள் சரண்யாவின் உடலை சோதனை செய்ததில் இறந்திருப்பது தெரிய வந்தன இது சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று  சோதனை செய்தபோது இறந்து கிடப்பது தெரிய வந்தன உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு   பிரேத பரிசோதனைக்குகான விபக்கு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

இச்சம்பவம் குறித்து டொம்புச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அழகேஸ்வரி  பழனிசெட்டிபட்டி காவல்துறை க்கு தகவல்தெரிவித்து விசாரணை செய்யுமாறு தெரிவித்தனர் .

டொம்புசேரி அரசுமருத்துவத்துறையினர் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவலின் பெரியில் உத்தமபாளையம் கோட்டாட்சியர் திருமணம் ஆகி நான்கு வருடமாகி ஆகிய நிலையில்  கர்ப்பிணி பெண் மரணம் அடைந்ததால் உடனடியாக  அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்தனர்

பிரேத பரிசோதனை செய்த பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது கணவன் வீரகுமார் மற்றும் அவரது மகன் பத்ரு இருவரும் தப்பி ஓடி தலைமறைவு ஆகினர். இதனால் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டன

இறந்த சரண்யாவை கணவர் கொலை செய்தாரா இல்லை சரண்யா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *