நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்து விட்டர்! விஜய் வரட்டுமே! கே.எஸ்.அழகிரி கிண்டல்

இந்திய கூட்டணியை திமுக வலிமையாக வழி நடத்துகிறது என்பதற்காக அவர்களை தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வருமானவரி துறை சோதனை நடத்தப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்காக அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பிய கோப்புகளில் இதுவரை ஆளுநர் கையெழுத்து இட வில்லை அதிமுகவினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூட ஆளுநர் தயாராக இல்லை.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லப்பட்டது விஜய் வரட்டும் பார்ப்போம் என நெல்லையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கு நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அரசியல் கட்சியில் இருக்கும் அணிபோல் பாஜகவின் அணியாக ஐடியும் ஈடியும் செயல்படுகிறது.

பாஜகவின் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டு ஈடியும் ஐடியும் செயல்படுகிறது.வருமானவரித்துறை செய்வது பொறுப்பற்ற செயல். தமிழகம், ராஜஸ்தான், கேரளா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் வருமானவரித்துறை சோதனை செய்வது பாஜகவின் அரசாட்சி தோல்வியடைந்ததற்கு உதாரணம். எதிர்கட்சிகள் ஆளாத பிறமாநிலங்களில் சோதனை செய்ததே கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை ஆனாலும் அவரை சிறையில் வைத்துள்ளனர்.

இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான டெல்லி முதலமைச்சரை விசாரணைக்கு அழைத்து அவர் வர மறுத்து விட்டார் .பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் யாரையும் விசாரணைக்கு இதுவரை அழைத்தது கிடையாது.இந்திய கூட்டணியை திராவிட முன்னேற்ற கழகம் வலிமையாக வழிநடத்துகிறது என்பதற்காக திமுக விற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சோதனை என்ற முயற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பது அப்பட்டமாக வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரிகிறது.அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு அரசு அளுனருக்கு அனுப்பிய கோப்பில் இதுவரை கையெழுத்திடவில்லை.

அதிமுகவினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூட ஆளுனர் தயாராக இல்லை.நீட் தேர்வுக்கு படிப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டும்தான் நீட் பயணம் பெரும் மெட்ரிக்குலெக்ஷன் மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில் படிப்பவர்களுக்கு நீட் எந்த வகையிலும் பயன் தராது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வரப்பிரசாதமாகவும் அவர்கள் பணத்தை வாரி குவிப்பதற்கும் உதவிகரமாக அமைகிறது. 

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும் வாய்க்கு வந்தபடி சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என சொல்லக்கூடாது. சாதி உணர்வு என்பதும் சாதிய ரீதியான பிரச்சினை என்பதும் தவறானவர்களால் வழிநடத்துபவர்களால் செய்யக் கூடியது. உரிமையை கேட்பது சுயமரியாதையை கேட்பது என்பது வேறு உரிமையை கேட்கிறோம் சுயமரியாதையை கேட்கிறோம் என ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வது எந்த சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

சாதியின் பெயரைச் சொல்லி சண்டையில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். நாட்டில் பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதற்கு உரிமை கிடையாது வரட்டும் பார்ப்போம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லப்பட்டது ஆனால் அவர் வரவில்லை. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *