கண்ணீர் கதை: பெரிய வெங்காயம் கிலோவிற்கு ரூ.20 அதிரடி உயர்வு

திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோவிற்கு ரூ 20 அதிரடி உயர்வு. சின்ன வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ 20 வரை குறைவு.

திண்டுக்கல்லில் வெங்காயத்திற்க்கு என்று  தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்  திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் செயல்படும். பெரிய வெங்காயம் கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். வெங்காய மார்க்கெட்டிற்கு இன்று 27.10.23 பெரிய வெங்காயம்  10 லாரிகளில் 250 டன் விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது கர்நாடகா மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து குறைவு காரணமாக கிலோவிற்கு ரூ 15 முதல் 20 வரை விலை உயர்ந்துள்ளது. 

கடந்த வாரம் கிலோ பெரிய வெங்காயம் ரூ 35 முதல் 40வரை விற்பனை ஆனது. ஆனால் தற்பொழுது கிலோ ரூ 50 முதல் 60 வரை விற்பனையாகிறது. திண்டுக்கல்  வெங்காய மார்க்கெட்டிற்கு 20 லாரிகளில் வெங்காயம் வரக்கூடிய இடத்தில் தற்பொழுது 10 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது இதனால் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

அதேநேரம் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், கோவை , திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, போன்ற மாவட்டங்களில் விளை நிலங்களில்  இருந்து எடுக்கக்கூடிய புதிய சின்ன வெங்காயத்தின் வரத்து அதிக அளவில் உள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ100க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்பொழுது கிலோ 80 முதல் 90 வரை தரைத்தை பொறுத்து விற்பனையாகிறது.

 புதிய சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்தால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *