‘யார் நாடகம் ஆடுகிறார்கள் சசிகலாவிடம் கேட்டால் தெரியும்’ உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
நீட் தேர்வு விலக்கை நாடகம் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யார் நாடகம் ஆடுகிறார்கள் என்பது சசிகலாவை கேட்டால் தெரியும் என்றார்.
விருதுநகருக்கு வந்த திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில், திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், கழக மூத்த முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
விருதுநகரில் நடைபெற்ற இளைஞர் அணி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் உதயநிதி ஸ்டாலினினுக்கு செங்கோல் வழங்கினர். வடக்கு தெற்கு,மாவட்டம் சார்பாக 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இளைஞரணி சார்பில் இரண்டு மாவட்டம் சார்பாக தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது, மாநாட்டு நினைவாக கொடியேந்திய இளைஞர் சிலை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
ஏனென்றால் விருதுநகர் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் பல சுதந்திர போராட்ட வீரர்கள் விளையாட்டு வீரர்கள் எழுத்தாளர்களை உருவாக்கிய மாவட்டம். மாவட்டத்திற்கு பலமுறை வருகை தந்துள்ளேன் ஆனால் முதல் முறையாக அமைச்சராக மாவட்டத்திற்கு வருகிறேன். சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி வெற்றி மாநாடாக அமைய வேண்டும். நீட்தேர்வு விலக்கு நமது இலக்கு.
தேர்தலுக்கு முன்பாக நீட்டுக்கு விலக்கு அளிப்போம் என நான் கூறியிருந்தேன் அதை செய்து காட்டுவோம். நாம் சேலத்தில் இரண்டாவது இளைஞர் அணி மாநாடு நடத்த உள்ளோம். அது கொள்கை அரசியல் கொண்ட மாநாடு. இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரையில் மாநாடு நடைபெற்றது எந்த கட்சி மாநாடு என்று நான் சொல்ல விரும்பவில்லை எதற்காக நடத்தினார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
அது எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமான மாநாடு அந்த மாநாடு. நீட் தேர்வு விலக்கிற்காக 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்தை திட்டமிட்டு உள்ளோம். ஒரு கோடி கையெழுத்தை நம் இளைஞர் அணியினர் பெற்று விடுவார்கள் போல் தெரிகிறது. மாநாட்டில் தலைவர் கையில் அந்த கையெழுத்துக்களை நாம் ஒப்படைக்க வேண்டும்.
நம் ஒன்றிய பிரதமர் எங்கு சென்றாலும் திமுகவை பற்றி பேசுகிறார் மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு செல்கிறார் அங்கு போய் திமுகவை பற்றி பேசுகிறார் திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டுமே பிழைக்கிறது கலைஞர் குடும்பம் என்கிறார். நான் கேட்கிறேன் ஒன்பதரை ஆண்டில் என்ன கிழித்தீர்கள் 15 லட்சம் போடுவதாக சொன்னீர்களே போட்டீர்களா. நாள் நாங்கள் சொன்னபடத கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கினோம்.
உங்களது ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் அதானி குடும்பம் மட்டுமே பிழைத்துள்ளது. துறைமுகம் ஏர்போர்ட் உள்ளிட்ட அனைத்தையும் அவருக்கு வாரி வழங்கி உள்ளீர்கள். இன்றைய பிரதமர் இந்தியாவை மாற்றுவோம் என்றார். அவரை பாராட்ட வேண்டும் என்றால் இந்தியாவை பாரத் என சிபிஎஸ் பாட புத்தகத்தில் மாற்றி உள்ளார் இதைத்தான் பாராட்ட வேண்டும்.
ஒன்றிய ,மாநில அரசுகளின் வரவு செலவுகளை தணிக்கை செய்யும் சிஏஜி ரிப்போர்ட் 9½ ஆண்டுகளில் ஏழரை லட்சம் கோடி ஊழல் என சொல்கிறது. ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி செலவழித்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என சொல்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது இதைப்பற்றி நமது தலைவர் கேட்டாலும் யார் கேட்டாலும் எந்த பதிலும் இல்லை.
இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் நீட் தேர்வு விலக்கு குறித்து திமுக மிகப்பெரிய நாடகம் ஆடுகின்றனர் என்கிறார். திமுக தலைவர் யார் காலிலும் விழுந்து முதலமைச்சராக இல்லை. சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அவரையே கட்சியை விட்டு நீக்கி உள்ளார்.
சசிகலாவை கேட்டால் யார் நாடகம் ஆடுவது என்பது தெரியவரும். இளைஞரணி மாநாட்டில் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை மிகப்பெரிய வெற்றி மாநாடாக வராலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாக மாற்றி காட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.