அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியர்; மயில்சாமி அண்ணாதுரை உறுதி

விண்ணில் ராக்கெட்டுகள் ஏவ சிக்கனமாக சிறந்த ஏவுதளமாக கட்டமைக்கப்படும் குலசேகரப்பட்டின ஏவு தளம்  சந்திரனுக்கு இன்னுன் பத்து வருடங்களில் அவர் இந்தியா மனிதர்களை அனுப்புமென்று தெரிவிக்கின்றார் மயில்சாமி அண்ணாதுரை.

கோவையில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்சியாளரான விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை பத்திரிகைகாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சந்திரயான் 3 – ன் 14 நாட்கள் மட்டுமே விக்ரம் லேன்டரின்  ஆயுட்காலம் எனவும் அதற்கான ஆயிட் காலம் நிறைவு பெற்றதாகவும் தெரிவித்த மயில்சாமி அண்ணாதுரை, பிரஞ்ஞான் அலைவரிசை விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால்தான் தகவல் கிடைக்கும் என்றும் பிரஞ்ஞான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது எனத்தெரிவித்த அவர், 

சந்திராயன் 3 பணி  நிறைவடைந்து இருப்பதாகவே நான் பார்க்கின்றேன். எனவும் தெரிவித்தார். ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளதாகவும் இது சிறு அங்கம்தான்.  ககன்யான் கடைசி நொடியில் நிறுத்தப்பட்டதாகவும். அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் செலுத்தப்பட்டது. இது இந்திய விண்வெளி துறையில் சிறப்பானதாக இருக்கும் இதில் பல கட்டங்களை தாண்ட வேண்டும். 

இது முதல் கட்டம் எனவும் தெரிவித்தார். குலசேகரபட்டினம்  திட்டத்திற்கு  நிலம் கையகப்படுத்த வேண்டும் . ஏவுதளம் அமைப்பதை தாண்டி , எரிபொருள் தயாரிப்பது உட்பட திட்டங்ளை  கொண்டு செயல்பட  சிக்கனமாக ஏவுதளமாக அமையும் என்றும் சிறிய ரக செயற்கை கோள்கள்தான் இப்போது அனுப்பபடுகின்றது. 

தினமும் ஒன்று ரெண்டு அனுப்பும் நிலை வரலாம். அப்போது  சிறப்பான இடமாக குலசேகரபட்டினம் ஏவுதளம் இருக்கும். அதற்கான கட்டமைப்புகள் வரும் போது பலன் அளிக்கும் என்று தெரிவித்தார். தமிழக அளவில் விஞ்ஞானிகளுக்கு  உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது உந்துசக்தியாக இருக்கும் எனத்தெரிவித்த அவர், சர்வதே விண்வெளி மையத்தில் போட்டி என்பது கூடாது. அனைவரும் ஒன்று  சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும் . 

அப்போதுதான் பிரச்சினைகள் வராது. சர்வதேச விண்வெளி மையம் போட்டி உருவாக கூடாத இடமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் முன்னெடுப்புகள் வர்த்தக  ரீதியாக பல நாடுகள் இந்தியாவை நோக்கி வரவழைக்கும் என்றும், நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது. சில வருடங்களில் அது நடக்கும். 

இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். ஆயுட் காலம் நிறைவடைத்த பின்பு விண்களன்ங்களை திரும்ப கொண்டு வருவது குறித்து இப்போதே ஆலோசிக்கபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *