ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; எமர்ஜென்சிக்கு ரெடியா? 

சென்னை நிலை என்பது வேறு தென் மாவட்டம் நிலை என்பது வேறு மருது சகோதரர் குருபூஜை தேவர் குருபூஜை இருப்பதால் 30 ஆம்  தேதிக்கு முன் பேரணி  அனுமதி வழங்க வேண்டாம் என தமிழக அரசின் தரப்பில் வாதம்.

24 ஆம் தேதி முதல் தென் மாவட்டம் முழுவதும் 7000 போலீசார் பாதுகாப்பு பணி உள்ளதால் போரனி க்கு அனுமதி வழங்கக் கூடாது.- அரசு தரப்பு. அனுமதி வழங்குவதில் பிரச்சனை என்றால் தமிழகத்தில் எமர்ஜென்சியை அறிவிக்கலாம் ஆர் எஸ் எஸ் தரப்பில் வாதம்.

ஆர்.எஸ்.எஸ் தரப்பு வாத்த்திற்க்கு எதிரப்பு தெரிவித்த  அரசு தரப்பில்  பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு குளறுபடி உள்ளதால் ஒன்றிய அரசில்  எமர்ஜென்சி அறிவிக்க கோரிக்கை வை்பாரா என கேள்வி எழுப்பினர்

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் அனுமதி வழங்குவது குறித்து இறுதி உத்தரவிற்காக வழக்கு நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி  மனு தாக்கல்.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ் ) சங்கம் சார்பாக மதுரை தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை, உள்ளிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில்  வருகின்ற 22ம் தேதி விஜயதசமி நாளன்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க கோரி ஆர்.எஸ்.எஸ்  மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவில் இந்திய சுதந்திரம் 75 வது ஆண்டு கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விஜயதசமி (22-10-23 ) நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக ஆர் எஸ் எஸ் அமைப்பின் சீருடையான காக்கி டவுசர், வெள்ளை சட்டை ,தொப்பி ,பெல்ட் பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4  மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வலமாக சுற்றிவந்து இறுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல் கடந்த வருடம் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம் காவல்துறை அனுமதி வழங்கவில்லை இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. பின்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற்று தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வல பேரணி நடத்தினோம்.

எனவே இந்த வருடம்  நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். அரசுத்தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் AAG வீரா கதிரவன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.

அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர், 

மதுரை இராமநாதபுரம் சிவகங்கை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவடங்களில் 27 ஆம் தேதி மருது சகோதரர்களின் பூஜை அதனை தொடர்ந்து 30 தேதி தேவர் குரு பூஜை உள்ளது இதற்க்காக 24 ஆம் தேதியில் இருந்தே 7 ஆயிரம் போலிஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.மேலும் தூத்துக்குடி யில் தசர நிகழ்ச்சி நடை பெறு கிறது இந்த நிகழ்ச்சியில் பல இலட்சம் பக்த்தர்கள் கலந்து கொள்வார்கள் சென்னை நிலை வேறு மதுரை நிலை வேறு  எனவே 30 ஆம் தேதிக்கு மேல் அனுமதி கொடுப்பது பற்றி பரிசீலனை செய்யலாம்.

கடந்த வருடம் தேவர் குருபூஜையின் போது 188 வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. காவல்துறை தரப்பில்  தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பதால் குருபூஜைகளின் போது குற்ற செயல்களும் குறைந்து வருகிறது எனவே 30-ஆம் தேதிக்கு முன்ன நடத்த அனுமதிக்க வேண்டாம் என வாதிட்டனர்

அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் தமிழகத்தில் (எமர்ஜென்சி) அவசர நிலை பிரகடனம் நடத்தலாமே என தெரிவித்தனர். அப்போது குருக்கிட்ட அரசின்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்  ஆர்.எஸ்.எஸ் தரப்பு வாத்த்திற்க்கு எதிரப்பு தெரிவித்தார்பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு குளறுபடி உள்ளதால் ஒன்றிய அரசில்  எமர்ஜென்சி அறிவிக்க கோரிக்கை வை்பாரா என கேள்வி எழுப்பினர்.

அப்பொழுது குறிப்பிட்ட நீதிபதி இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது பிரச்சினை வேண்டாம் வழக்கில்  இறுதி உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணை நாளை தீர்ப்புக்காக ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *