வரதட்சணை கொடுமை; கணவர் மற்றும் இரத்த உறவு மீது மட்டுமே வழக்கு – உயர் நீதிமன்றம் அதிரடி

Madurai High Court

வரதட்சணை கொடுமை தடுப்புச்சட்டப்படி பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரத்த உறவு மீது மட்டுமே வழக்கு பதிவு செய்ய  முடியும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. கணவரின் இரத்த உறவு அல்லாத வேறு  நபர்கள் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு.

இந்த வழக்கில் கணவரின் இரண்டாவது மனைவியின் உறவினர்கள் மீது  வரதட்சணை கொடுமை செய்தார்கள் என்று காவல்துறை வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்லது.

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி, கருப்பாயி என்ற பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு

எங்கள் பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவர் 2020-ம் ஆண்டில் தனது கணவர் மீது தம்பி துறை மீது வரதட்சணை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் சேர்த்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்பேரில் போலீசார் ஆண்டிபட்டி கோர்ட்டில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டனர். 

அவர்களின் குடும்ப விவகாரத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் முறையாக விசாரிக்காமல் எங்கள் மீதான வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். எங்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு ஆஜராகி வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் (498 A) IPC  பிரிவு மிகத் தெளிவாக உள்ளது கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க  முடியும் என்று உள்ளது ஆனால் சட்டத்திற்கு மாறாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் இது ஏற்கத்தக்கது அல்ல என வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில். ஆண்டிபட்டியை சேர்ந்த வனிதா, தனது கணவர் தம்பிதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார். 

அந்த பெண்ணின் புகாரில், கணவரின்  இன்டாவாது மனைவி யின் உறவினர்களான மனுதாரர்களையும் சேர்த்துள்ளார். வரதட்சணைச் சட்டப்படி பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரத்த உறவு மீது மட்டுமே  நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இங்கு பெண்ணின் கணவருக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் இரண்டாவது மனைவியின் உறவினர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. 

அந்த புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குபதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். எனவே மனுதாரர்கள் மீதான வழக்கின் இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *