சிறையில் சந்திரபாபு நாயுடுக்கு நல்ல கவனிப்பு; சிறைத்துறை டிஐஜி அதிரடி

ராஜமுந்திரி சிறைக்கு வந்த சந்திரபாபு தற்போது 1 கிலோ எடை அதிகரித்து ஆரோக்கியமாக  உள்ளார் சிறைத்துறை டிஐஜி ரவிகிரண்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு திறன்மேம்பாட்டு வழக்கில் கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு 35 நாட்கள் ஆன நிலையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடல் எடை 5 கிலோ வரை குறைந்துள்ளதாகவும் இதேநிலை தொடர்ந்தால் கிட்னி பாதிக்ககூடும் என அவரது மனைவி புவனேஸ்வரி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சந்திரபாபு உடல் நிலை குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரவிகிரண் கூறுகையில் சந்திரபாபு கைது செய்யப்பட்டு  சிறைக்கு வந்த போது அவரின் தினசரி மருந்துகள் கொண்டு வந்தார். அவற்றை எங்கள் மருத்துவர்கள் குழுவினர் பார்வையிட்டு எந்தந்த மருத்துகள் எதற்காக பயன்படுத்துகிறார். என ஆய்வு தொடர்ந்து தவறாமல் வழங்கி வருகின்றனர். என்.எச்.ஆர்.சி. அறிக்கையின்படி சிறைக்கு அவர் வந்தபோது அவரது எடை 66 கிலோ இருந்தது. 

அதனபிறகு ஒருமுறை 68.7 கிலோவாகவும் நேற்று எடுத்ததில் 67 கிலோவாக உள்ளது. எனவே சமூக வளைதளத்தில் பரவி வரும் வகையில் அவரது உடல் நலம் குறித்து கவலைப்பட தேவையில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு நீரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். உடனடியாக ஓ.ஆர்.எஸ் வழங்கப்பட்டது. அதன் பின்னர் தோல் பிரச்சனை ஏற்பட்டதால் எங்கள் மருத்துவர் பரிந்துரையின்படி தோல் நோய் பிரிவு ஆசோசியட் டாக்டர் உதவி பேராசிரியர் டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து தண்ணீர் அதிக அளவு குடிக்கும்படி தெரிவித்தனர். அதன்படி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு எத்தனை பாட்டில் தண்ணீர் குடிக்கின்றார் எனவும் கணக்கு வைக்கப்படுகிறது. அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை சிறப்பு மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.  சந்திரபாபுவுக்கு உடல்நலக்குறைவு என சமூக வலைதளங்களில் வரும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என  சிறைத்துறை டிஐஜி ரவிகிரண் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *