பாஜக கூட்டணியில் இருந்து நான் விலகவில்லை, பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து நான் விலகவில்லை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் பொய் பிரச்சாரம் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கைகலூரில் வாராகி யாத்திரையின் நான்காம் கட்டமாக  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர்  பவண் கல்யான் பேசினார். இதில் பாஜக கூட்டணியில் இருந்து ஜனசேனா கட்சி விலகியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். நான் பாஜக கூட்டணியில் தான் உள்ளேன். அவ்வாறு வெளியேறுவதாக இருந்தால் அதை நானே கூறுவேன். 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சிரமம் அடைய வேண்டும். மாநில நலன் கருதி   பாஜக உரிய நேரத்தில் நல்ல முடிவு அறிவிப்பார்கள். பாஜக ஆசிர்வாதத்துடன்  மாநிலத்தில் தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணி  ஆட்சி அமையும். தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தாலும் டில்லியில் இருந்து தெலங்கானாவிற்கு நடைபெறும் தேர்தலுடன் வைத்தாலும் நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். 

தற்பொழுது உள்ள நல திட்டங்கள் அனைத்தும் வழங்கி அதனுடன் கூடுதலாக பல திட்டங்கள் மக்கள் மீது கூடுதல்  வரி சுமத்தாமல், கடன் இல்லாமல் மாநிலத்திற்கு வருவாயை அதிகரித்து செயல்படுத்தப்படும். நம் பாரத நாடும் நாட்டின் சட்டமும், சனாதனம் அனைத்து மதத்திற்கு உரிய கெளரவம் கொடுக்க வேண்டும் என கூறி உள்ளது. 

ஆனால் தமிழகத்தில் நாம் வணங்கும் ஐயப்பன், சரஸ்வதி, ஆஞ்சனேய சுவாமி உள்ளிட்ட இந்து கடவுள்  குறித்தும் சனாதனம் பற்றி தவறாக பேசி வருகிறார்கள். சனாதனம் என்பதே இந்து மதத்தில் இருந்தாலும் அனைத்து மதத்திற்கும் கெளரவம் கொடுக்க வேண்டும் என்பதே. ஜனசேனா கட்சி  அதற்கு கட்டுப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *