ஒரே ஊரை சேர்ந்த 200 பெண்களின் மார்ப்பிங் ஆபாச போட்டோக்கள்… பரபரப்பில் மக்கள்

தியாகதுருகம் அருகே பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்த நபரால் பரபரப்பு, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் சிக்கியதால் கிராமப் பெண்கள் கொந்தளிப்பு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்

தப்பியோடிய வாலிபரை மூரார்பாளையம் கிராமத்தில் மடக்கி பிடித்து கைது செய்த காவல்துறையினர், கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் வசந்தகுமார் என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இவர்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் பணியாளர்களிடம் இருந்து வாங்கிய புகைப்படங்களை மாப்பிங் செய்து, தன்னுடைய செல்போனில் ஆபாசமாக படங்களாக வைத்திருந்துள்ளார். இதையடுத்து வசந்த், சமீபத்தில் தன்னுடைய செல்போனை அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரிடம் ரூ.2 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார்.

இந்நிலையில், செல்போனை அடமானம் வாங்கிய அந்த இளைஞர், அந்த செல்போனை ஓபன் செய்து பார்த்துள்ளார். அப்போது, அந்த செல்போனில் அக்கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் போட்டோக்கள் அனைத்தும் மாப்பிங் செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதையடுத்து, அந்த இளைஞர் மாப்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படங்கள் குறித்து  அக்கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ரவி என்பவருக்கு தெரிவித்துள்ளார்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக தியாகதுருகம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது 

தொடர்ந்து அந்த செல்போனை பிடுங்கி அனைத்து பெண்களும் தங்கள் புகைப்படத்தை பார்த்து கொந்தளித்தனர்.தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த பெண்கள் வசந்த் வீட்டின் முன்பகுதியை கல்லால் அடித்து நொறுக்கினர். இது குறித்து தகவல் அறிந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிதள  பொறுப்பாளர் வசந்த் கிராமத்திலிருந்து தப்பியோடினார். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தப்பியோடிய வசந்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வீரசோழபுரம் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தப்பி ஓடிய வசந்த் என்பவரை போலீசார் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மூரார்பாளையம் என்ற கிராமத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர் 

இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் கிராம மக்கள் வசந்தை தங்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் கைது செய்த வசந்தை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களிடம் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுமாறு கூறி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

கிராமப் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததை நினைத்து என்ன செய்வது என்றால் தெரியாமல் நாங்களே மன வேதனையில் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து குற்றவாளி வசந்த்-தை கைது செய்துகாவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதை வீடியோ கால் மூலமாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் காண்பித்தனர் 

இருந்தபோதிலும் கைது செய்யப்பட்ட வசந்தை இங்கு அழைத்து வரவேண்டும் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய நிலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது இந்த சாலை மறியல் போராட்டத்தால் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பல்வேறு விதமான வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் அணிவகுத்து நின்று கொண்டிருந்த வாகனங்கள் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து முறையாக வாகனங்களை அனுப்பிவிட்டு போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியாகச் சென்ற பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *