மறைந்த எதிர் நீச்சல் மாரிமுத்துவுக்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான மாரிமுத்து கடந்த8 ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் சொந்த கிராமம் தேனி மாவட்டம் பசுமலைதே ரியாக இருந்தாலும், அவர் கடந்த 1975 ம் ஆண்டு சிவகாசியிலி ருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணபேரி கிராமத்தின் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு மட்டும் கல்வி பயின்றுள்ளார். 

அதனைத் தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த பின்பாக சிவகாசியி லிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 1984 ம் ஆண்டு முதல் 1987ம் வருடம் வரை 3 வருடங்கள் சிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு படித்துள்ளார். இந்நிலையில் சிவகாசி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் சார்பாக தங்கள் முன்னாள் மாணவர் என்ற முறையில், நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு மாரிமுத்துவின் உடன் பயின்று அதே கல்லூரியில் பணி புரியும் ரோஸ்மதன் குமார், பிரான்சிஸ் சேவியர்தேன்ராஜ், அவருக்கு கல்வி கற்று கொடுத்த பேராசிரியர் வேல்முருகன், கல்லூரி முதல்வர் நந்தகுமார், நிர்வாகத்தினர் டி. டி. ராஜேந்திரன், கிரிதரன் உள்பட மற்றும் பலர்  மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, மாணவ- மாணவிகள் பலரும் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வரிசையாக நின்று மாரிமுத்துவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர். 

நிகழ்ச்சியில் தங்களது கல்லூரியின் முன்னாள் மாணவர் மாரிமுத்துவின் நினைவலைகள் குறித்த புகைப்படங்களையும், அவர் கைப்பட எழுதிய முத்தான எழுத்துக்கள் கொண்ட கருத்துக்களின் பதிவுகளையும், கல்லூரி நிர்வாகத்தினர் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். குடும்ப சூழல் காரணமாக திரைப்படத்துறைக்குள் மாரிமுத்து நுழைந்ததாக தெரிவித்த, அவருடன் பயின்ற முன்னாள் மாணவர் ரோஸ்மதன் குமார் கூறும் போது:- 

பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த தங்களது சக நண்பர் மாரிமுத்து படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்ததாகவும், முதல் மரியாதை திரைப்படம் வெளியானதை பார்த்த பின்பு தான் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டதாகவும், திரைப்பட துறையின் கவன ஈர்ப்பால் அவரது கல்வி பின் தங்கியதாகவும், அதனையடுத்து தங்களது வாழ்வில் பிரிவிருந்தாலும் தொடர்பில் இருந்ததாகவும், வாழ்க்கையில்  நடந்த பல்வேறு நிகழ்வுகளை நண்பர் மாரிமுத்து அவ்வப்போது தன்னுடன் பகிர்ந்து கொண்டதாகவும், 

வெள்ளித்திரையில் யிருந்து சின்னத்திரை நாடகத்திற்கு திரும்பியது குறித்து4  பேர் காசு கொடுத்து நடிகரை தியேட்டர்ல போய்  படம் பார்ப்பது சினிமா. ஆனால் ஒரு நொடிப் பொழுதில் ஒவ்வொரு வீட்டிலும், அனைவரின் மனதிலும், நடிகனின் முகம் பதிவாகி தஞ்சம் புகுவது தான் சின்னத்திரை நாடகம் என மாரிமுத்து தெரிவித்து, வில்லன் கேரக்டராக இருந்தாலும் முடிவில் நல்லவிதமாகவே அமையும் என்று கூறியதாகவும், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் நடிகனான பின் அவர் தனது உடல் நலத்தை பேணிக் காக்க தவறியதால் அவருக்கு இந்த ஒரு துயரமான முடிவு ஏற்பட்டு தங்களை விட்டு மறைந்ததாக தெரிவித்தார்.

கல்லூரி நிர்வாகி டி. டி. ராஜேந்திரன் கூறும் போது :-மாரிமுத்து இயல்பாகப் பேசுவது ஒரு நல்ல நடிப்பாக இருந்து தன்னை ஈர்த்ததாகவும், ஒரு திரை படக் காட்சியின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் தனது படம் அச்சிட்டிருப்பதை செல்பி எடுக்கும் அளவுக்கு ஒரு துணிச்சல் தைரியமிக்கவர் மாரிமுத்து எனவும் புகழாரம் சூட்டி, இன்றைய தினம் அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் அனைத்து தரப்பினர்களும் அஞ்சலி செலுத்தி வருவது அவரது குடும்பத்தாருக்கு ஆசீர்வாதமாக மாறி, ஆண்டவன் எல்லா நிறைவுகளையும் அவரது குடும்பத்தாரின் வாழ்க்கையில் தருவார். என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *