500 கிலோ மாலை, ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய் சீர்வரிசை என அசத்திய நண்பர்கள்

நண்பனின் இல்ல காதணி விழாவில் 500 கிலோ எடை மாலையுடன், ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாய் சீர்வரிசை செய்த நண்பர்கள் 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நண்பர் இல்ல காதணி விழாவிற்கு 500 கிலோ எடை கொண்ட மாலையுடன் ஊர்வலமாக வந்த சக நண்பர்கள் பண மாலை அணிவித்து ஜல்லிக்கட்டு காளை மற்றும் ஆட்டு கிடாய் உள்ளிட்ட  சீர்வரிசைகளை வழங்கி தாங்களும் தாய்மாமன தான் என  அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தினர்.

மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு இல்ல விழாவானாலும் அதனை தனித்துவத்தோடு நடத்துவது வழக்கம். அதிலும் குறிப்பாக தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் போட்டியே நடக்கும், அந்த வகையில் தாய்மாமன் சீர் வரிசைக்கு போட்டியாக நண்பர்கள் சீர்வரிசை செய்து அசத்தியுள்ளனர், 

மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் லதா தம்பதியினர், இவர்களது குழந்தைகளான சாதனா ஸ்ரீ, சாய் சிவன் இருவருக்கும்  காதணி விழா வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் பல்வேறு சீர்வரிசை செய்தனர். 

ஆனால் அவையெல்லாம் மிஞ்சும் வகையில் பாலகிருஷ்ணனின்  நண்பர்களான கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வபாண்டி, அபுதாஹிர், மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட ஏழுபேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனின் குழந்தைகளுக்கு தாங்களும் தாய்மாமன்கள் தான் என நிரூபிக்கும் வகையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

மேலும் பொய்க்கால் குதிரை, ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் தாய்மாமன் சீர்வரிசை போல் சீர்வரிசையுடன் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்த இவர்கள் நண்பன் குடும்பத்தினருக்கு ராட்சதமாலை அணிவித்ததுடன் நண்பனுக்கு பண மாலையும் அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அப்போது விசேஷ வீட்டார் ஆனந்த கண்ணீர் வடித்தனர்,  மேலும்   ஆட்டம் பாட்டம் என காதணி விழாவையே குதூகல படுத்திய நண்பர்களின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த மாலையிலும் மதுரையினா பாசம் இனிமேல் இந்த உறவை ஊரே பேசும் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.  விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்தும் கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *