13 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்; சீமான் ஓபன் டாக்…!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேளாண்மை நம் பண்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய சீமான், பாஜக.வினர் அனைத்தையும் துறந்து சாமியாராக மாறினாலும் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பார்கள். பதவியை துறக்க மாட்டார்கள். அது ஒரு துறவறம். 

டாஸ்மாக்.ல் மதுபானங்களை ஏசி அறையில் பாதுகாக்கின்றனர். ஆனால், மாவட்ட தலைநகரங்களில் கூட உணவு பொருட்களை சேமிக்க கிடங்கு இல்லை. இயற்கை வேளாண்மைக்கு இயற்கை உரம் வேண்டும், ஆனால் இயற்கை உரம் கிடைக்க ஆடு மாடு தேவை, ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல அது ஒரு வருமானம்.  மாட்டுக்கறி ஏற்றுமதியை நம்பி நாட்டின் பொருளாதாரம் உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை அரசு பணியாக மாற்றுவேன்.

 60 ஆண்டு திமுகவையும் 50 ஆண்டு அதிமுகவையும் நம்பிய நீங்கள் ஐந்து ஆண்டு ஆட்சி செய்ய நாம் தமிழர் கட்சியை நம்பி ஓட்டு போடுங்கள்.  டாஸ்மாக்கில் சரக்கு விற்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கும் போது வேளாண் தொழில் செய்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாதா..?

நானும் கட்சி ஆரம்பித்து, 13 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஒருதலை காதலாகவே உள்ளது. மக்கள் யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. நானும் மனிதன் தானே, ஒரு்முறையாவது ஓரக்கண்ணால் பார்த்து கண்ணடித்து செல்லுங்கள். தேர்தலில் ஒருமுறையாவது என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.

100 நாள் வேலை திட்டத்தில் கேரளாவை பின்பற்ற வேண்டும் 2024 2026 தேர்தலில் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். அரசியலை பணம் ஜாதி தான் தீர்மானிக்கிறது. வரும் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். 8 கோடி மக்களுடன் தான் கூட்டணி.  இந்த முறையும் சீதாலட்சுமி தான் வேட்பாளர்,  அவருக்கு ஓட்டு போடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *