அதிமுக ஒன்றிய தலைவருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம்…!

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவரின் (அதிமுக)கணவர் அத்துமீறல் – ஒன்றிய தலைவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதம் – ஜல் ஜீவன் திட்டத்தில் நடைபெறுகின்ற முறைகேடுகளை விசாரிக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளை அறையை விட்டு வெளியேற சொன்னதால், அதிமுகவை சேர்ந்த ஒன்றிய தலைவரின் கணவருக்கும் –  பாஜக நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவராக லதா (அதிமுக) என்பவரும்,  துணைத் தலைவராக வளர்மதி(அதிமுக) என்பவரும் உள்ளனர் . இந்நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் , ஒன்றிய தலைவரின் கணவர் ஜெகந்நாதன் ஒன்றிய தலைவர் அருகில் உள்ள தலைவரின் இருக்கையின் அருகில் மற்றொரு நாற்காலியை வைத்து , 

அதில் ஜெகநாதன் அமர்ந்து கொண்டு அரசு அலுவலர்களையும் ,ஒன்றிய கவுன்சிலர்களிடமும் பல்வேறு பணிகள் குறித்து அவரே அங்கு முழு ராஜாங்கம் செய்து வருவதால், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் பாஜக நிர்வாகிகள் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ஒன்றிய தலைவராக பெண் ஒருவர் இருக்கையில் அவரது கணவர் அவரது அறையில் அத்துமீறி நுழைந்து , அவர் இங்கு அலுவலகத்தில் ராஜாங்கம் செய்வது எந்த வகையில் நியாயமானது? என அதிகாரியிடம் முறையிட்டனர். அதிகாரிகள் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை பற்றி விசாரிக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளை ஒன்றிய தலைவரின் அறையில் அமர்ந்திருந்த அவரது கணவர் ஜெகந்நாதன் பாஜக நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

தனது மனைவியே தனக்கு இங்கு அமர்ந்து பணியினை செய்யச் சொன்னதாகவும்,  ஆகையால் இந்த அறையில் அமர்ந்து இருப்பதாகவும் தெரிவித்ததால் , பாஜக நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , மனைவி உத்தரவிட்டால் வீட்டில் சென்று அமர வேண்டுமே தவிர , அரசு அலுவலகத்தில் வந்து அமர்வது சரியா? என வாக்குவாதம் செய்தனர்.

இதனால் பாஜக நிர்வாகிகளை ஜெகநாதன் அறையை விட்டு வெளியேறச் சொன்னதால்,  இரு கட்சி சார்ந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது . இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் ,  துறைச் சார்ந்த அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதை அறிந்த நிலையில், திருமங்கலத்தில் பாஜகவுக்கும் அதிமுகவிற்கும் மோதல் முற்றுகிற சம்பவம் பரபரப்பாக காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *