சந்திராயன் 3,  14 நாட்கள் கூட நிலவில் தாக்குப்பிடிக்க முடியாது; அதிர்ச்சி செய்தி..!

“சந்திராயன் 3 விண் ஊர்தியால் ஏவப்பட்டு,  நிலவில் இறங்கியுள்ள விக்ரம் ரோவர், அங்கு ஒரு இரவு தாக்குப் பிடிக்காது என  இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தைக் கேலி செய்யும் சீனா (Global Times China) என தினத்தந்தியில் ஒரு செய்தி (படம் இணைத்துள்ளேன்) வந்துள்ளது.

எது உண்மை எனப் பார்த்தால், சீனாவின் Global Times பத்திரிக்கையில் சந்திராயனின் விக்ரம் ரோவர் பற்றி சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை. அந்த உண்மையைக் கண்டறிந்தது சீனா அல்ல. இந்தியாவின் இஸ்ரோ வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தான் சீனப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

விக்ரம் ரோவர் ஒர் இரவு கூட நிலவில் தாக்குப்பிடிக்க முடியாது என்பது உண்மை தான். நிலவில் 1 நாள் இங்கு 14 நாள்.  அதோடு கதை முடிந்தது. இதைத் தான் இஸ்ரோ சொல்கிறது. இஸ்ரோ சொல்வதைத்தான்  சீனப் பத்திரிகையும் சொல்கிறது.

சீனா விண்வெளி அறிவியலில் இந்தியாவை விட பன்மடங்கு முன்னேறியுள்ளது என்பதும் உண்மை. சீனாவை விட இந்தியா விண்வெளி ஆய்வில் முன்னேறி இருந்தால், சீனாவுக்கு முன்னரே இந்தியா நிலவில் ரோவரை இறக்கி இருக்க வேண்டும். சீனா 2013இல் தனது ரோவரை நிலவில் இறக்கியது. 10 ஆண்டுகள் கழித்தே இந்தியா இறக்கியுள்ளது. 

அடேய்களா, அவன் (சீனா) அறிவியல் உண்மையைச் சொன்னால், அதை நீ கேலி, கிண்டல் ன்னு சொல்ற. இவனுக (அதாவது வாட்ஸாப் வாயனுக – சங்கிகள்) வேதத்துல தான் எல்லா அறிவியலும் இருக்குன்னு சொல்லி, அறிவியலைக் கிண்டல் பண்ணுனா, நீ அதை அறிவியல் உண்மை போல் வெளியிடுறீங்க.. உங்க டிசைன் தான் என்னங்கடா?

சு. விஜயபாஸ்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *