எம்.எல்.ஏ.அலுவலகம் முற்றுகை; பாஜக நபர்கள் கற்களை வீசி கலவரம்…!

தெலுங்கானா மாநிலம் வாரங்களில் எம்.எல்.ஏ.அலுவலகம் முற்றுகையிட முயன்ற பாஜக ஆளும் பிஆர்எஸ்  கட்சியினர் இடையே மோதல்  கற்கள் வீசி தாக்கியதால் பரபரப்பு 

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆளும் பி ஆர் எஸ் கட்சி ஏழை எளிய மக்களுக்காக இரண்டு படுக்கை கொண்ட வீடுகள் கட்டித் தருவதாக கூறி அதனை நிறைவேற்றவில்லை, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவில்லை, தலித்த பந்து திட்டத்தில்  உரியவர்களுக்கு  வழங்கப்படவில்லை என குறி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் எம்எல்ஏக்கள் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். 

அவ்வாறு தெலங்கானா மாநிலம  வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ வினய் பாஸ்கரின் முகாம் அலுவலகம் முற்றுகையிட பாஜகவினர் திரண்டனர். இதனால் எம்.எல்.ஏ. முகாம் அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு முள்வேலி அமைத்தனர். இந்த நிலையில், போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.  

இந்த மோதலில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியினரும் நுழைந்து பாஜகவினர் மீது கற்கள், தடிகளை கொண்டு தாக்கினர். பதிலுக்கு பாஜகவினர்  கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரையும் சமாதானம் செய்ய போலீசார் தடியடி நடத்தினர்.  பாஜக பிரமுகர் ராகேஷ் ரெட்டியை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். 

இதனால் வாரங்கலில் பரபரப்பான சூழல் நிலவியது. இதேபோன்று  மாநிலத்தின் பல பகுதிகளில் பிஆர்எஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளையும் பாஜக தலைவர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அந்தந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒட்டி ஆளும் பி ஆர் எஸ் கட்சி 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தேர்தலை மையப்படுத்தி அந்தந்த கட்சிகள் தங்களையும் மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆளுமை பி ஆர் எஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையிப்  வாரங்களில் கலவரமாக மாறியதற்கு வழி வகுத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *