#நீட் அரசியல் பிரச்சனை அல்ல, அடுத்த தலைமுறையின் பிரச்சனை; எம்.பி. சு. வெங்கடேசன்

மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேச்சு, நீட் தேர்வை ரத்து செய்ய விடாது தொடர்ந்து திமுக குரல் எழுப்பி வருகிறது. இது கட்சி கூட்டணி பிரச்சனை அல்ல அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை.

நீட் தேர்வு திரிசூலம் போன்றது ஒரு முனை மாநில கல்வி கொள்கை குத்தி கிழிக்கிறது, மற்றொரு முனை மாணவர்களின் தன்னம்பிக்கை குலைத்து தற்கொலைக்கு தள்ளுகிறது. மற்றொரு முணை Teaching குலைத்து Coaching ஊக்குவிக்கிறது.

சிபிஎஸ்சி பள்ளிக்கு இந்தியா முழுவதும்  ஒரே பாடத்திட்டம்.ஆனால் 5 மண்டலங்களில் 5 தேர்வு நடக்கிறது. நீட் தேர்வு  அப்பட்டமான மாநில உரிமை மீறல். சென்னை மண்டலத்தில் கேள்வி தாள் மட்டும் மிக கடுமையாக இருந்தது. இது திட்மிட்ட சதி எனவே கூடுதல் மதிப்பெண் வேண்டும் என கேட்டு போராடினோம்.

நீட் விலக்கு மசோதாவை ஏக மனதாக நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு  அனுப்பினோம். அவர் உள்துறை அமைச்சரிடம் அனுப்பி உள்ளதாக  கூறினார். இதன் பின்பு ஆர்டி ஜ கேள்வி கேட்ட போது, உள்துறை அமைச்சரிடம் கேட்ட போது கடிதமே வரவில்லை என தெரிவித்தார்கள். 

நீட் மசோதாவிற்கு  கையெழுத்து போட மாட்டேன்  என ஆளுநர் சொல்லுகிறார்.ஆணியை கழட்டும் திருப்புளி ஆணியை இனி திருக மாட்டேன் என்று கூறினால் கழுத்தை தீருகி ஆணியை கழட்ட தெரியும். ஆளுநர் பதவியின் மானத்தை காப்பாற்ற தமிழக அரசு போராடுகிறது ரவி என்பவற்கு அல்ல. Teaching கொன்று Coaching கொண்டாடுகிறது.

ஆளுநருக்கு எதிராக கேள்வி கேட்ட பெற்றோர் மைக் வாங்கப்படுகிது. நீட் எதிரானது ஒட்டு மொத்த தமிழகத்தின் குரல் அதில் வெற்றி பெற்றே தீருவோம். மதுரையில் +2 முடித்தவர்கள் 48 ஆயிரம் கல்லூரி சேராதவர்கள் 4 ஆயிரம்  பேர். 

அவர்களிடம் பேசி 2200 கல்லூரியில் சேர்த்த பெருமை தமிழக அரசுக்கு உண்டு இது மாணவன் பிரச்சனை அல்ல எல்லா தேர்வு முறையிலுக்கு எதிரானது. தமிழகத்தின் மருத்துவ கல்வி கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. 2024 பிறகு நீட் மசோதவை கிழித்து எறிவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *