ஆளுநர் தமிழிசை மாணவர்கட்டுளை திசை திருப்புகிறார்… அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சனை என்பது இன்று தமிழ்நாடு மக்களுடைய ஒட்டு மொத்த உணர்வுகளை  வெளிப்படுத்தக் கூடிய பிரச்சனை அதற்காகத்தான் திமுக போராட்டம் நடத்துகிறதே தவிர வேறு எதற்கும் அல்ல, எதிர்க்கட்சிகள் எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய இயக்கம்தான் திமுக. புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

ஆளுநர் தமிழிசை கூறியுள்ளது தமிழ்நாடு மாணவர்களை திசை திருப்பி அவர்களது நம்பிக்கையை சீர்குலைக்கின்ற செயலாக நாங்கள் கருதுகின்றோம்.. நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றோம் மாறுபட்ட கருத்துக்கள் வரும் பொழுது தமிழ்நாட்டிலேயே எதிர்ப்பு இருக்கின்றதோ என்று நினைக்கத்தக்க வகையில் ஒரு எண்ணத்தை ஆளுநராக இருக்கக்கூடியவர் உருவாக்கினார் என்று சொன்னால் அதைவிட வெட்கக்கேடோ அசிங்கமோ இருக்க முடியாது. இது தமிழர்களுடைய உணர்வுக்கு தான் நாங்கள் மரியாதை அளிக்கின்றோம் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

இந்தி எதிர்ப்பு என்பது இன்றும் எங்களின் உடம்பில் ரத்தத்தில் ஊறி உள்ளது. நாங்கள் யாரும் இந்தியை ஆதரித்து பேசவில்லை. இந்தியை திமுக ஆதரிக்கிறதா என்றால் இல்லை. நாடாளுமன்றத்தில் பேசினாலும் ஆங்கிலம் அல்லது தமிழில் தான் பேசுவோமே தவிர ஹிந்தியில் பேசுவது கிடையாது யாரும் இந்தியில் பேசினார்கள் என்றால் மொழிபெயர்ப்பு செய்து தமிழையும் ஆங்கிலத்தில் வைத்துக் கொள்வோமே தவிர நாங்கள் இந்தியில் கேட்பது கிடையாது. இந்திக்கு ஆதரவாக எந்த இடத்திலும் இருந்தது கிடையாது. இந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் ரத்தத்தில் ஊறிய கொள்கை.

மாணவர்கள் தற்கொலை வழக்கமான ஒன்றுதான் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கூறிய கருத்திற்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை வழக்கமாக ஒன்றா? நீட் தேர்வை தோல்வி அடைந்து விட்டேன் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டேன் என்று சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அது வழக்கமான ஒன்றா? தேர்வுக்கு பயந்து சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள், நீட் தேர்வாள் தான் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு மாணவன் சொன்னான் என்றால் அது வழக்கமான ஒன்றா? நீட் தேர்வு இல்லை என்று சொன்னால் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வானா? நீட் தேர்வு இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள், நீட் தேர்வை நீக்கி பாருங்கள் வழக்கமான ஒன்று நடக்கிறதா என்று தெரியும்.

சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநர் திரும்பி அனுப்பி பின்னர் மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றி தற்பொழுது ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு சென்றுள்ளது. குடியரசு தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நாம் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. குடியரசு தலைவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்துதான் இருக்கிறது தவிர அவர் முடிவு எடுப்பதற்கு முன்பே நாம் சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்குவது என்பது சட்டப்படி முடியாது. நீட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அதை விரிவு படுத்துவது பற்றி பரிசீலனை செய்யலாம்…. புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *