மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம்.. பேச்சு வார்த்தையால் இன்று கைவிடப்பட்டது

திருச்செந்தூர் அருகே  அமலிநகர் மீனவ கிராமத்தில் மீனவர்கள் சாகும்  வரை உண்ணாவிரதம் போராட்டம் தூத்துக்குடி மாவட்ட மறை ஆயர் ஸ்டீஃபன் அந்தோணி பிள்ளை பேச்சு வார்த்தையால்  இன்று கைவிடப்பட்டது-   ஆயர்  மீனவர்களுக்கு பழச்சாறு வழங்கி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் முடிவு-ஆனால்  தூண்டில்  வளைவு பாலம்  அமைப்பதற்கான போராட்டம் நாளை  தொடரும்.

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் சுமார் 2,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தூண்டில் வளைவு பாலம் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால் 2022 -ம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் ரூ. 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால் இந்தப் பகுதி மீனவர்கள் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில்  கடந்த 7 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்   மீனவர்கள் ஈடுபட தொடங்கி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டமானது  மீனவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு தொடர்ந்து  11 வது நாளாக இன்று நடைபெற்று வந்த நிலையில் , 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  மீனவ  மக்களுக்கு  பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததில்  அமலி நகர்   கமட்டி உறுப்பினர்கள்  சென்றதில் பேச்சு வார்த்தை உடன்படாததால் பேச்சுவார்த்தைக்கு சென்ற மீனவர்கள் திரும்பி வந்தனர்.. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மறை ஆயர்  ஸ்டீபன் அந்தோணி பிள்ளை   அமலி நகர் பகுதிக்கு வந்தார் அப்போது சாகும் வரை  உண்ணாவிரம் போராட்டத்தில்   ஈடுபட்டுள்ள மீனவ  மக்களிடம்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்… 

ஆயர் ஸ்டீபன் அந்தோணி  பிள்ளை  மீனவ மக்களிடம் சாகும் வரை உண்ணாவிரதம் என்கிற போராட்டத்தினை கைவிடுமாறு மீனவ மக்களிடம் கோரிக்கையிட்டார்.. உடனே  மீனவர்கள் அக்கோரிக்கையினை ஏற்று சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை   கைவிடுவதாகவும்  ஆனால் தங்களின்   வாழ்வாதாரத்திற்க்கான  தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் போராட்டமானது தொடரும் என்று   அமலி நகர்  மீனவர்கள்  தெரிவித்தனர்…   

அதன்படி மீனவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தினை தூத்துக்குடி மாவட்ட மறை ஆயர் ஸ்டீஃபன் அந்தோணி பிள்ளை மீனவர்களுக்கு பழச்சாறு கொடுத்து சாகும் வரை உண்ணா விரதம் போராட்டத்தினை முடித்து வைத்தார்.அதனை தொடர்ந்து தற்போது 11 வது நாளான   மீனவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டமானது   கைவிடப்பட்டு  தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி போராட்டமானது நாளை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *