ஜெயிலர் பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கிய அதிமுக கடம்பூர் ராஜூ

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுத்து ஜெயிலர் பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் பட காலை காட்சி மொத்தமாக 550 டிக்கெட்டுகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்பதிவு செய்து மதுரையில் இருபதாம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை  அழைப்பு விடுக்கும் விதமாக திரையரங்குக்கு முன்பு வந்து அனைவருக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார் 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுக மாநாடு தொடர்பாக சில அமைப்புகள் எதிரான போஸ்டர்களை ஒட்டி வருவது சிலர் தூண்டுதலின் பெயராக நடைபெற்று வருகிறது அதிமுக எந்த சலசலப்புக்கு அஞ்சாவது என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *