திமுக போராடி வெற்றி பெறும்; நீட்டையும் நிச்சயம் மீட்போம்… அமைச்சர் ஐ. பெரியசாமி

neet

திமுகவை பொருத்தவரை கொள்கையில் லட்சியத்தில் போராடி வெற்றி பெறக் கூடிய இயக்கம், ஆகவே நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.  பெரியசாமி பேட்டி

திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் 12  பள்ளிகளைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் 3,167 பேருக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டியை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி  வழங்கினார். 

இதற்கான நிகழ்ச்சி திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் இன்று 14.08.23 நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-  

திமுகவை பொருத்தவரை எடுத்துக் கொண்ட கொள்கையில் கடைசி வரை போராடி வெற்றி பெற்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். கொள்கை லட்சியத்தில் வெற்றி பெறக்கூடிய இயக்கம் இந்தியாவில் இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் வரை தனது லட்சியத்தில் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வெற்றி பெறக் கூடியவர் தான் தமிழக முதல்வர் ஆகையால் கண்டிப்பாக நீட் தேர்வில் விளக்கு பெற்று தீர்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *