அதிமுகவை அழிக்க வேண்டும் என்றால் ஆர்.எம்.வீரப்பன் நிலை தான் ஓ.பி.எஸ்-க்கும்; கே.பி.முனுசாமி எச்சரிக்கை.

அதிமுக பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேனி பெரியகுளம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து கேபி முனிசாமி பேசுகையில்,  எதிரிகளிடம் நம் பலத்தை காட்டுவதற்காகவும்,  துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டய நிலையில் நாம் உள்ளோம். எம்.ஜி.ஆர் உடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன்,  ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்ளாமல்,  ஜானகியை  முதலமைச்சர் ஆக்கினார். அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு, அவரை மண்ணித்து மூத்தவர் என்று ஆர்.எம்.வீரப்பனை கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கினார். 

ஆனால் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ரஜினிகாந்த்- க்கு ஆதரவாக பேசியதால், அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நீக்கினார்.அப்பேர்ப்பட்டவரை ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்கு அழைக்கிறார். அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ஆர்.எம்.வீரப்பனுக்கு நேர்ந்த நிலை தான் தற்போது ஓ.பி.எஸ்-க்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு முதல்வர் பதவி பறிபோன பிறகு தான் அம்மா ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறினார் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் கூறியவர் தான் ஓபிஎஸ். சசிகலா சிறைக்கு சென்ற பின்பு அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் கூறி வந்தார். 

ஆனால் அவரால் அது கடைசி வரையில் முடியவில்லை. கட்சி பிளபு படக்கூடாது என்று தான்  ஓபிஎஸ்-இடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது துணை முதல்வர்,  நிதித்துறை, வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் என உயிரிய பதவிகள் வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற கேள்வி வந்த போது தான் முதல்வராக வேண்டும் என ஒரு போதும் எடப்பாடி நினைக்கவில்லை. ஓபிஎஸ்-ஸிடம் கேட்டோம் அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கூறினார். 550 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்றால் எடப்பாடி  வாங்கிக்கொடுத்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தான். வேண்டும் என்றால் நேருக்கு நேர் விவாதம் செய்து கொள்ளலாம். இந்த பக்கம் ஓபிஎஸ் இருக்கட்டும் மறுபக்கம் நானும் இருக்கிறேன் என சவால் விடுத்தார்.

234 தொகுதிக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்தவர் எடப்பாடி. ஓபிஎஸ் எங்கு சென்று வாக்கு சேகரித்தார். எதிர்கட்சி தலைவர் தேர்வின் போது ஓ.பி.எஸ் எதிர் கட்சி தலைவராக வேறு ஒருவரை கூறுகிறார். எடப்பாடி மீது காழ்ப்புணர்ச்சி அவருக்கு. நரேந்திர மோடி டீ விற்றவர் என்று அவரே சொன்ன பிறகு தான், தன்னையும் ஒரு டீக்கடைக்காரர் என்றும், டீ கடையில் டீ ஆற்றியவன் என்று,  பிரதமரோடு தன்னை ஒப்பிடுகின்றார். ஓபிஎஸ் என்ற துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதற்காகத் தான் இந்த மாநாடு.

பகவத்கீதை கூற்றுப்படி துரோகியான ஓ.பி.எஸ் அழிக்கப்பட வேண்டும். எடப்பாடியை அழிக்க நிணைத்தால் ஓபிஎஸ் ஆக இருந்தாலும்,  டிடிவியாக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்று பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக நகர், ஒன்றியம், பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *