என்எல்சி போராட்டம் இரண்டாவது நாளாக பேருந்துகள் மீது கல்வீச்சு!!

நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேல் வளையமாதேவி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் களத்தில் போராட்டத்தில் குறித்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இந்த நிலம்பையகப்படுத்தப்பட்ட பணி துவங்கிய நிலையில் இன்று காலை வரை 18 அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் நடத்திய கல் வீச்சு சம்பவத்தில் 18 அரசு பேருந்துகள் சேதமடைந்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பண்ருட்டியில் பேருந்து மீது கல்வீசியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று இரண்டாவது நாளாக மாலை முதல் இரவு வரையில் மூன்று அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. பூண்டியாங்குப்பம், கண்ணாரப்பேட்டை, பாலூர் ஆகிய பகுதிகளில் இந்த கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேர பேருந்து சேவைகளை அரசு போக்குவரத்துக் கழகம் நிறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக கிராமப் பகுதிகளுக்கு இரவு நேர பேருந்து இல்லாத காரணத்தினால் கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களுக்கு மாற்று வாகனம் மூலம் தங்களது ஊர்களுக்கு செல்வதற்கான வழிவகைகளை செய்து வருகின்றனர். நாளை காலை 6 மணிக்கு பிறகு கிராமப்புற பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *